உறவுகள்.....
பிறப்பு உறவுகளுடன். அவற்றுள் சில உறவுகள் வெறுமனே உறவுகளாகவே இருந்து விடுகின்றன். சில உறவுகள் தொடர்பு இல்லாமல் சென்று விடுகின்றன. திருமணம் ஆகும் வரை, அம்மா, அப்பா, அக்கா தங்கை, அண்ணன் தம்பி, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி திருமணம் ஆன பின், இருக்கும் உறவுகளோடு, மனைவி, கணவன், மாமனார், மாமியார், மைத்துணன், மைத்துணி ஒரு மரமானது, எப்படி புதிது, புதிதாக, இலை, கிளைகளாக துளிர் விட்டுக்கொண்டிருக்கிறதோ, அதைப் போல மனித உறவுகளும் புதிது, புதிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு தாயின் குழந்தைகளாக வளரும் போது, அன்புடனும், பாசத்துடனும் ஒருவரை ஒருவர் கொஞ்சுவதும், தூக்கி சுமப்பதும், நினைவில் நிற்கும் காட்சிகள். ஆனால் அதே குழந்தைகள் வளர, வளர, ஏனோ அந்த நேசமும், பாசமும் குறைந்து விடுகிறது. இதற்கு நாம் யாரையும் குறை கூற முடியாது. உறவு என்பது கண்ணாடி பொருள் போன்றது. கை தவறினால் சுக்கு நூறாக உடைந்து விடும். பிறகு அதை சேர்ப்பது என்பது இயலாத ஒன்று. உறவு வட்டம் பெரிதாக இருக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சியும், மன நிறைவும் நிறைந்து நிற்கிறது. வாழ்க்கையை வாழ வைக்கும் உந்து சக்த...